பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு..! இரு அணிகள் இணைப்புக்கு அச்சாரமா? | Former TN CM O.Panneerselvam will meet PM Modi, today

வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (14/08/2017)

கடைசி தொடர்பு:09:40 (14/08/2017)

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு..! இரு அணிகள் இணைப்புக்கு அச்சாரமா?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்துப் பேசவுள்ளார். 


வெங்கைய நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். அந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி சென்றிருந்தார். இருவரும் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை மட்டுமே சந்திப்பதற்கு மோடி அனுமதி வழங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்குச் சென்றார்.

அங்கு சாய்பாபா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அதன்பின்னர் அவர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். மேலும், இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார். மரியாதை நிமித்தமாகவே பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே டி.டி.வி.தினகரனின் நியமனம் செல்லாது என்று எடப்பாடி அணியினர் அறிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் மோடியை சந்திக்கவுள்ளார். எனவே, விரைவில் இரு அணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.