போலீஸை கண்டித்து மறியல்செய்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டம் மணலிக்கரையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி  இடையே ஏற்பட்ட தகராறில், கணவனைக் கண்டித்து மனைவி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்போது, அந்தக் கணவருக்கு ஆதரவாக வேர்கிளம்பி காஸ்கிரஸ் தலைவர் ஏசுராஜ் செயல்பட்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண் திருவட்டார் போலீஸ் ஸ்டேஷனின் புகார் கொடுத்தார். அதன்படி, காங்கிரஸ் தலைவர் ஏசுராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொய்யான வழக்கை  வேர்கிளம்பி காங்கிரஸ் தலைவர்மீது போட்டுள்ளதாகவும், அதைக் கண்டித்து திருவட்டார் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடப் போவதாகவும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ராஜேஷ்குமார் தெரிவித்திருந்தார்.

அதன்படி  இன்று, திருவட்டார் பேருந்து நிலையத்தில் காங்கிரஸார் சுமார் 200 பேர் குவிந்தனர். அங்கிருந்து எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் தலைமையில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட சென்றனர். அப்போது போலீஸார்  காங்கிரஸ்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முடிவு எட்டப்படாததால், காங்கிரஸார் பேருந்து நிலைய சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால், திருவட்டார் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், குமரி கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட 200 பேரை போலீஸார் கைதுசெய்தனர். கைதான காங்கிரஸ்காரர்கள் போலீஸாரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!