புதுச்சேரி காவல்துறைக்கு 4 குடியரசுத் தலைவர் விருதுகள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதும், முதல் அமைச்சர் விருதும் வழங்கப்படுகின்றன. இந்த வருடம், குடியரசுத் தலைவர் மற்றும் முதல் அமைச்சர் விருதுபெரும் காவல் அதிகாரிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை காலை 8.59 மணிக்கு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் சுதந்திரதின விழாவில், முதல் அமைச்சர் நாராயணசாமி கலந்துகொள்கிறார். தேசியக்கொடியை ஏற்றிவைத்து, சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்க இருக்கிறார்.

புதுச்சேரி

குடியரசுத் தலைவர் விருதுபெறும் அதிகாரிகள் :

வெங்கடசாமி – காவல் கண்காணிப்பாளர் (கிழக்குப் பிரிவு)

குணசேகரன்  – காவல் கண்காணிப்பாளர் (மேற்குப் பிரிவு)

கலையரசு  – ஆய்வாளர் (ஓய்வு)

ஜிந்தா கோதண்டராமன் – ஆய்வாளர் (சி.பி.சி.ஐ.டி)

முதல் அமைச்சர் விருதுபெறும் துணை உதவி ஆய்வாளர்கள்:

தமிழரசன், சுப்பிரமணி, மோகன்தாஸ், உமேஷ்பாபு.

சிறந்த காவல் நிலையமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான விருதையும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் நாளை வழங்கி முதல்வர் கௌரவிக்க இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!