கிருஷ்ண ஜெயந்தியை என்றைக்குக் கொண்டாடுவது..?

ன்று, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல செப்டம்பர் மாதம் 13-ம் தேதியும் கொண்டாடப்பட இருப்பதாக ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. 

கிருஷ்ண ஜயந்தி

ஒரே விழா எப்படி இரண்டு முறை வரும் என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. அதுகுறித்து விளக்கம் பெற, ரங்கராஜன் ஐயங்காரிடம்  கேட்டோம். அவர் கூறியவை இங்கே...

''பகவான் கிருஷ்ணர் அவதரித்தது ஆவணி மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளாகும். இந்த தினத்தில்தான் வைஷ்ணவர்கள் கொண்டாடுவார்கள். 

வைஷ்ணவர்களைத் தவிர்த்து மற்றவர்கள், ஆடி மாத அமாவாசையை அடுத்து வரும் பௌர்ணமியை ஆவணி அவிட்டமாகக் கொண்டு, அதைத் தொடர்ந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமியை கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் ஆடி அமாவாசைக்குப் பிறகு பௌர்ணமியில் வரும் ஆவணி அவிட்டம், ஆடி மாதத்திலேயே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து வரும் அஷ்டமி திதியும் ஆடி மாதத்திலேயே வந்துவிட்டதால், பெரும்பாலானோர் இன்று கொண்டாடுகிறார்கள்.

வைஷ்ணவர்களைப் பொறுத்தவரை, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தைத்தான் பிரதானமாகக் கொள்வார்கள். அன்றைக்கு அஷ்டமி திதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், ரோகிணி நட்சத்திரத்தில்தான் கொண்டாடுவார்கள். அதுமட்டுமல்ல, ரோகிணி நட்சத்திரம் என்றைக்கு அதிக நேரம் இருக்கிறதோ, அன்றுதான் கொண்டாடுவார்கள். அந்த வகையில், செப்டம்பர் மாதம் 13-ம் தேதிதான் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாட இருக்கிறார்கள். எனவே, அவரவர் சம்பிரதாயப்படி கொண்டாடுவதுதான் சரி.

 விழா

குருக்ஷேத்திரக் களத்தில் அர்ஜுனனின் கலக்கம் தீர்த்த அருளாளனாம் அந்த கீதாசார்யனை நாம் குறிப்பிட்ட ஒரு நாளில்தான் வழிபடவேண்டும் என்பதில்லை. அனுதினமும் அவனைக் கொண்டாடி ஆனந்தம் அடையலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!