வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (14/08/2017)

கடைசி தொடர்பு:21:58 (14/08/2017)

ஆகஸ்ட் 15-ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

ஆகஸ்ட் 15-ம் தேதி, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்திருக்கும் என அதன் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள், விடுமுறை நாளில் பொழுதுபோக்கிற்காகச் செல்லும் முக்கிய இடங்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவும் ஒன்று. வழக்கமாக செவ்வாய்தோறும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விடுமுறையாகும். விலங்குகள் ஓய்வு எடுப்பதற்காகவும் பூங்காவை பராமரிப்பதற்காகவும் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

ஆனால், இந்த செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் வருகிறது. அதேபோல தொடர் விடுமுறை காரணமாக 12,13,14 ஆகிய தேதிகளில் 10,000-த்துக்கும் மேற்பட்டவர்கள் பூங்காவிற்கு வந்திருந்தார்கள். “அரசு விடுமுறை தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியும், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பூங்காவிற்கு வர திட்டமிட்டிருப்பார்கள். இதனால், ஆகஸ்ட்டு 15-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, பூங்காவில் உள்ள வனவிலங்குகளைப் பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று, சுமார் 10,000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க