வெளியிடப்பட்ட நேரம்: 22:09 (14/08/2017)

கடைசி தொடர்பு:12:00 (15/08/2017)

எடப்பாடி ஆதரவாளர், தினகரன் ஆதரவாளர் ஆனது எப்படி..?

தினகரனுக்கு எதிராக கையெழுத்திட்ட எடப்பாடி ஆதரவாளர், அ.தி.மு.க-வின் மாநில விவசாயப்பிரிவு செயலாளர் துரை.கோவிந்தராஜன், தினகரன் கூட்டத்தில்  பங்கேற்றார்

தினகரன் ஆதரவாளர் ஆனது எப்படி..
தஞ்சை மாவட்டத்தின் எம்.ஜி.ஆர் காலத்து மூத்த நிர்வாகி, எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது அரசு கொறடா பதவியில் இருந்தவர். இப்போது அ.தி.மு.க-வின் மாநில விவசாயப் பிரிவுச் செயலாளராக இருப்பவர், துரை.கோவிந்தராஜன். கடந்த வியாழக்கிழமை தினகரனுக்கு எதிராக எடப்பாடி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, தினகரன் பதவி செல்லாது என அறிவிப்பு வெளியிட்ட அஃபிடவிட்டில் கையெழுத்திட்டவர், துரை.கோவிந்தராஜன்.
இந்நிலையில், தஞ்சையில் மூத்த நிர்வாகி துரை.கோவிந்தராஜனை தினகரன், திவாகரன் இருவரும் சந்தித்துப் பேசி, தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், இன்று தினகரன் தலைமையில் நடைபெறும் மதுரை மேலூர் கூட்டத்துக்கு, தஞ்சை ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துப் புறப்பட்டுச்சென்றார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த துரை.கோவிந்தராஜன், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வுக்கு ஆற்றிய பணிகள்குறித்துப் பேசினார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதாதான் இந்தக் கழகத்தைக் காப்பாற்றினார் என்றவர், தன்னுடைய ஆதரவாளர்களுடன் தினகரன் கூட்டத்துக்குச் சென்றார்.
அவருடைய ஆதரவாளர்களிடம் பேசினோம், ''தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் வரவேண்டுமென அழைப்பு விடுத்திருந்தனர். ஆகையால், தினகரன் தலைமையிலான கூட்டத்துக்குப் புறப்பட்டுள்ளார்" என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க