வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ’ஆண்ட்ராய்டு ஆப்’ – தேர்தல் ஆணையம் அசத்தல்

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும் முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துகொள்வதற்கும் இந்தியத் தேர்தல் ஆணையம் ஈரோ-நெட் (ERO-NET) என்ற இணையதளம் மற்றும் ’ஆண்ட்ராய்டு ஆப்’-ஐ அறிமுகம்செய்திருக்கிறது. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநிலத் தேர்தல் அலுவலகத்தில், இந்த ‘ஆப்’-ஐ மாநிலத் தேர்தல் ஆணையர் கந்தவேலு அறிமுகப்படுத்தினார்.

தேர்தல்

அப்போது பேசிய அவர், ‘‘தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கவும், நாடு முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளவும் இந்த ‘ஆப்’ உதவியாக இருக்கும்.மேலும், வாக்காளர்கள் தங்களது விண்ணப்பத்தை National Voters Service Porters (www.nvsp.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய முடியும். அப்படிப் பதிவுசெய்யப்படும் விண்ணப்பங்கள் UNPER (Unified National Photo Electoral Rolls) என்ற தகவல் அறையில் பராமரிக்கப்படும். அனைத்து மண்டல மொழிகளிலும் இந்த ’ஆப்’ செயல்படும். இதன்மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயரைச்சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பித்தவுடன்

தேர்தல்

அவருக்கு ஒரு தனிப்பட்ட எண் அவரது செல்போனுக்கு வரும்.அந்த எண்ணைக்கொண்டு அந்த விண்ணப்பத்தின் பல்வேறு நிலைகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் வாக்காளருக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த விண்ணப்பத்தின் அப்போதைய நிலை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். அதிகாரிகள், வாக்காளர் பட்டியலைப் பராமரிக்கவும், வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கவும் மற்ற மாநில வாக்காளர் பதிவு அதிகாரிகளை எளிதில் தொடர்புகொண்டு, சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம் போன்ற பணிகளைச்  செய்யும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தவறுகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவுசெய்வது தவிர்க்கப்படும். மேலும், ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்ளலாம். இந்த வசதியை இணையதளம் மூலமாகவும் ’ஆண்ட்ராய்டு ’ஆப்’ மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!