வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (15/08/2017)

கடைசி தொடர்பு:12:00 (15/08/2017)

எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


நாட்டின் 71-வது சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா நடைபெற்றது. அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக கொடியேற்றினார். விழாவின்போது தமிழக அரசின் விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் கலந்துகொள்ள தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசின் சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அரசு விழாவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. கூட பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லாமல் தமிழக அரசின் சுதந்திர தின விழா நடந்தது.