9-ம் வகுப்பு மாணவியை கொடி ஏற்றவைத்து ஊக்கப்படுத்திய பள்ளி நிர்வாகம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஸ்ரீ சரவண அய்யர் நடுநிலைப்பள்ளியில் கடந்த வருடம் 8-ம் வகுப்பு முடித்து தேசியத் திறனாய்வு தேர்வில் வெற்றிபெற்ற மாணவியை கொடி ஏற்றவைத்து ஊக்கப்படுத்தியுள்ளது இப்பள்ளி நிர்வாகம். 

student kodiyetram

இப் பள்ளியின் தாளாளர் ராமச்சந்திரனிடம் பேசினோம், ‘’ கடந்த 1895-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது இப்பள்ளி. திருச்செந்தூரிலேயே முதலில் தொடங்கப்பட்ட பள்ளி இது. மொத்தம் 250 மாணவ மாணவிகள் படிக்கிறாங்க. 12 ஆசிரிய ஆசிரியைகள் பணி செய்யுறாங்க. 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக அரசு தேசிய திறனாய்வுத் தேர்வு என்ற தகுதிகாண் வகையில ஒரு தேர்வை நடத்திட்டு வர்றாங்க. இந்த தேர்வில் வெற்றிபெறுவது கடினம்தான். ஆனா, வெற்றி பெற்றால் மாதம் ரூ.500 வீதம் வெற்றி பெற்ற மாணவர் அல்லது மாணவி 12-ம் வகுப்பு முடிக்கும் வரை 4 வருஷத்துக்கு மொத்தம் ரூ.24,000 உதவித்தொகையா கிடைக்கும். எங்க பள்ளியில் இந்தத் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு நடத்துறோம். கடந்த 3 வருஷத்துல 20 மாணவர்கள் வெற்றிபெற்று உதவித்தொகை வாங்கிட்டு இருக்காங்க.

பள்ளிகளில் வழக்கமாக பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர் என இவர்களில் யாராவது ஒருவர் கொடி ஏத்துவாங்க. ஆனா, எங்க பள்ளியில படிச்சு கடினமான தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்று போன வருஷம் 8-ம் வகுப்பு முடிச்சுட்டு இப்போ திருச்செந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிச்சுட்டு வர்ற எங்க மாணவி சரஸ்வதியைக் கொடி ஏற்ற கூப்பிட்டோம்.

காலையில் பெற்றோருடன் பள்ளிக்கு வரச்சொல்லி, கொடி ஏற்றச் சொல்லி மற்ற மாணவர்களுக்கு மிட்டாய் கொடுத்துட்டு ஒழுக்கத்தைப் பற்றியும், திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெறுவதைப் பற்றியும் பேசினார் மாணவி சரஸ்வதி. பள்ளி சார்பில் கலாம் ஐயாவின் ‘அக்னிச்சிறகுகள்’ புத்தகத்தை பரிசாகக் கொடுத்தோம். 

manavikku parisu vazangal

இந்த மாணவியை கொடி ஏத்த வச்சு ஊக்கப்படுத்தினதுனால இந்த வருஷம் 8-ம் வகுப்பு படிக்குற மாணவர்களுக்கும் நாமும் திறனாய்வுத் தேர்வுல பாஸ் பண்ணனும், கொடி ஏத்தணுமுங்கிற ஒரு லட்சியம் உருவாகும். இது புதிதல்ல, கடந்த 3 வருஷமா மாணவர்கள்தான்  சுதந்திரதின விழாவில் சிறப்பு அழைப்பாளர்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!