தியாகி கக்கன் பிறந்த கிராமத்தில் இப்படி ஒரு நல்ல முடிவு! | the kakakan village people made an good decision

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (15/08/2017)

கடைசி தொடர்பு:20:20 (15/08/2017)

தியாகி கக்கன் பிறந்த கிராமத்தில் இப்படி ஒரு நல்ல முடிவு!

இன்று ஆகஸ்ட் 15 ம் தேதி நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு  முழுவதும் சிறப்பான முறையில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது . தலைமை செயலகம் முன்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார் . அதேபோல் பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றிய பின் 2022 -க்குள் ஒரு புதிய இந்தியாவை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம் என தெரிவித்தார் . இவ்வாறு நாட்டில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினம் கொண்டாப்பட்ட நிலையில் மதுரை மேலூரை அடுத்த தும்பைபட்டியிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சுதந்தர போராட்ட தியாகி கக்கன்  பிறந்த இந்த ஊரில் அவருக்கு நினைவு மணிமண்டபவம் உள்ளது .

இந்த மணிமண்பத்தில் இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது . அதில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்படவேண்டும், சாலையோரங்களில் இருக்கும் மாமிச கடைகளின் மூலம் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுக்கவேண்டும், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வியாபாரம் செய்யக்கூடாது, அப்படி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்றும், திறந்தநிலையில் மலம்  கழிக்க கூடாது என்றும் முடிவு எடுத்தனர் . மேலும் இது தொடர்பாக கிராமம் முழுவதும் விழிப்புணர்வு நடத்தி கக்கன் பிறந்த இந்த கிராமத்தை முன் மாதிரியான கிராமமாக மாற்ற வேண்டும் என அக்கிராம மக்கள் சபதம் ஏற்றனர் .