ராமநாதபுரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் அலட்சியம் காட்டிய அரசியல்வாதிகள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், மாவட்டத்தில் உள்ள  நான்கு தொகுதிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவில்லை. தொகுதி அமைச்சரும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ-வுமான மணிகண்டன், முதல்வர் பங்கேற்ற நிகழ்சியில் பங்கேற்றார்.  மற்றவர்களான பரமக்குடி முத்தையா, திருவாடானை கருணாஸ் ஆகிய இருவரும் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டி, தனது தொகுதியில் தேசியக்கொடி ஏற்றினார். அங்கும் பிரச்னைதான். கொடியேற்ற விழாவை ஏற்பாடுசெய்தவர்கள், தேசியக்கொடியைத் தலைகீழாகக் கட்டிவைக்க,  அதை அறியாத எம்.எல்.ஏ., பாண்டி, கொடியை அப்படியே ஏற்றிவிட்டார். பின்னர், அதைச் சரிசெய்து மீண்டும் ஏற்றிவைத்தார். 

சிறு கம்பியில் கட்டப்பட்ட தேசிய கொடி

அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், அதிகாரிகள் அதற்கு ஒரு படி மேலாகச் சென்று, தேசியக்கொடியை அவமதித்துள்ளனர். சாயல்குடி காவல் நிலையத்தில், தேசியக்கொடி ஏற்றுவதற்கென தனி கொடிக்கம்பம் நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அதை விடுத்து, காவல் நிலையக் கட்டடத்தின் மேல் இருந்த சிறு கம்பி ஒன்றில் தேசியக்கொடியைக் கட்டி, தங்கள் தேசப் பற்றை வெளிக்காட்டினர்.

 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!