நைஜீரியாவை அதிரவைத்த ‘போகோ ஹரம்’ பெண் பயங்கரவாதிகள் | Boko Haram women suicide bombers kills 27 in Nigeria

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (16/08/2017)

கடைசி தொடர்பு:07:37 (16/08/2017)

நைஜீரியாவை அதிரவைத்த ‘போகோ ஹரம்’ பெண் பயங்கரவாதிகள்

boko haram, போகோ ஹரம்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பு, தனது அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்திவருகிறது. போகோ ஹரம் அமைப்பைச் சேர்ந்த பெண் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 83 பேர் வரை படுகாயமடைந்து உயிருக்குப் போராடிவருகின்றனர். பள்ளிச் சிறுமிகள் கடத்தல், கிராமங்களைப் பிடித்துவைத்து மிரட்டுவது, தனது எதிர்ப்பாளர்களைக் கொடூரமாகக் கொல்வது என நைஜீரியாவையும் தாண்டி உலகையே அச்சுறுத்திவருகிறது ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பு.

இவர்களைக் குறிவைத்து பன்னாட்டு வீரர்கள் அடங்கிய ராணுவமும் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியான மைதுகுரி நகரின் அருகேயுள்ள கோண்டுகா கிராமத்தில், போகோ ஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தக் கிராமத்தில் இயங்கிவந்த அகதிகள் முகாம் அருகே, போகோ ஹரம் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பெண் தற்கொலைப்படை பயங்கரவாதிகள், எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்தினர். தங்கள் உடலில் கட்டிவந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 83 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.