’நீட் தேர்வு விலக்குக்கு எதிராக வழக்கு தொடர்வோம்!’: நீட் ஆதரவாளர்கள்!

we want neet

 

தமிழகம் முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரும் நிலையில், நீட் தேர்வில் தேர்வான மாணவர்கள் தங்களுக்கு நீட் தேர்வு வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். 

தற்போது நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற தகவலால் அதிர்ந்து போய் உள்ளனர் நீட் தேர்வு ஆதரவு மாணவர் குழுவினர். இதுகுறித்து அம்மாணவர்கள் கூறுகையில், ‘நீட் தேர்வில் நாங்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளோம். நீட் என்னும் பொதுத்தேர்வு முறைக்காக இரண்டு, மூன்று ஆண்டுகள் அதற்காக மட்டுமே படித்துதான் தேர்வு எழுதியுள்ளோம். அதுவும் அரசின் உறுதியான அறிவிப்பால்தான் நாங்கள் நீட் தேர்வுக்கு என்று குறிப்பிட்டு படித்துவந்தோம். ஆனால், நாங்கள் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்ற நிலையில் தற்போது நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படும் என்றால் நாங்கள் என்ன செய்வது’ என்று கூறினர்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே இந்த மாணவர்கள் குழு மனு அளித்திருந்தனர். இந்நிலையில் ஓராண்டுக்கு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியான தகவல்கள் வெளியாவதால் நீட் தேர்வில் தேர்வான மாணவர்கள் கவலையில் உள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பெற்றோர்களும் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வழக்கறிஞர் கண்ணன் பேசியதாவது :  

’கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் சொன்னது. ஆனால், தமிழக அரசு போன வருடம் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தது. இதுவே கடைசி என்று அறிவுறுத்தியது. தற்போது மீண்டும் விலக்கு என்கிறது. நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசை நம்பித்தான் படித்தார்கள் மாணவர்கள். 33 ஆயிரம் பேர் ஸ்டேட் போர்டில் படித்து வெற்றி பெற்றுள்ளனர். எனவே இந்த நீட் தேர்வின் விலக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாராக உள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம்’ எனத் தெரிவித்தார்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!