4 மணி நேர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி! | DMK president M Karunanidhi discharged from hospital

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (16/08/2017)

கடைசி தொடர்பு:12:05 (16/08/2017)

4 மணி நேர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி!

தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த குழாயை மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நான்கு மணி நேர சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

karunanidhi


உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் முதல் வீட்டில் ஓய்வெடுத்துவந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு வீட்டில் வைத்தே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவந்தன. உணவு கொடுப்பதற்காக தொண்டைப் பகுதியில் உணவுக் குழாய் ஒன்று பொருத்தப்பட்டு, அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில், உணவுக்குழாயை மாற்றுவதற்காக தேனாம்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலை 6.30 மணியளவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். சுமார் 4 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு, கருணாநிதி கோபாலபுரம் இல்லம் திரும்பினார். கடந்த 8 மாதங்களாக ஓய்வில் இருந்துவரும் கருணாநிதி, மருத்துவமனைக்குத் தனது காரிலேயே சென்று திரும்பினார். அவருக்கு தொடர்ச்சியாக பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் வீட்டில் வைத்து அளிக்கப்படும் என்று தெரிகிறது.