காவிரி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்! | Madurai high court bench stays opreating sand quarries on Cauvery river

வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (16/08/2017)

கடைசி தொடர்பு:14:42 (16/08/2017)

காவிரி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்!

கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து திருச்சி வரை மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

முசிறியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர்  உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் " மதுரை, குளித்தலை பாலத்துக்குக் கீழ் கட்டுமானப் பணிக்காக மணல் குவாரிகள் மூலம்  அதிக அளவு மணல் அள்ளப்படுகிறது, அரசு குறிப்பிட்ட விதிகளை மீறி அதிகப்படியாக மணல் அள்ளப்படுகிறது . இதன் காரணமாக  நீரோட்டம் இல்லாமல் போகிறது. மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்துதான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மணல் அதிகமாக அள்ளுவதால் தண்ணீர் வரத்தும் குறைந்துவருகிறது. எனவே, மணல் அள்ளும் குவாரிகளுக்கு மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,  கரூர் மாவட்டம் மாயனூரிலிருந்து திருச்சி வரை மணல் அள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், குவாரிகளிலும் மணல் அள்ள தடை விதித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசின் பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலர், கரூர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .