முறையற்ற வகையில் வாடகைத் தொகையை அதிகரித்தனர்: லதா ரஜினிகாந்த் பள்ளி நிர்வாகம் விளக்கம்

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில்,  லதா ரஜினிகாந்துக்குச் சொந்தமான பள்ளி செயல்பட்டுவருகிறது. பள்ளி இயங்கிவரும் கட்டடத்தின் வாடகை பாக்கி,  கடந்த சில ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.  வாடகை பாக்கி பல கோடி ரூபாய் உள்ளதாம். இதனால் கட்டடத்தின் உரிமையாளர், அந்தப் பள்ளி மாணவர்களை வெளியேற்றிவிட்டு, இன்று பள்ளியை இழுத்து மூடிவிட்டார்.  

இந்நிலையில், தற்போது பள்ளி நிர்வாகம், இதுகுறித்து அதிகாரபூர்வ விளக்கம் ஒன்றை, அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், "நாங்கள் கிண்டியில் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளி நடத்தி வருகிறோம். சமீபகாலமாக நிலத்தின்  உரிமையாளரின் குடும்பத் தகராறு காரணமாக, நாங்கள் அவர்களிடமிருந்து அநேக தொந்தரவுகளை சந்தித்து வருகிறோம். இது வாடகை பற்றியது மட்டும் அல்ல. இது ஒரு சுரண்டல். அவர்கள் காரணமில்லாமலும், முறையற்ற வகையில் நாங்கள் பேசியதைவிட வாடகைத் தொகையை அதிகரித்தனர். இதுகுறித்து ஏற்கெனவே ஆலோசித்து அந்த இடத்தை காலி செய்வது குறித்து முடிவெடுத்துள்ளோம். இந்த பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!