நெல் ஜெயராமனுக்கு நெகிழ்ச்சி பாராட்டு விழா... | Appreciation ceremony for Nel Jayaraman

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (16/08/2017)

கடைசி தொடர்பு:21:55 (16/08/2017)

நெல் ஜெயராமனுக்கு நெகிழ்ச்சி பாராட்டு விழா...

பாரம்பர்ய நெல் விதைகளைப் பாதுகாத்து வரும் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த நெல் ஜெயராமனுக்கு முத்துப்பேட்டை ரோட்டரி சங்கத்தினரும், திருவாரூர் மாவட்ட வேளாண்மைத்துறையும் இணைந்து பாராட்டு விழாவை நடத்தினர்.

பாராட்டு விழா...

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நெல்விதைகளைப் பாதுகாத்து பாரம்பர்ய நெல் அழிந்துபோகாமல் பாதுகாத்து வந்தவர் ஜெயராமன். 20 ஆண்டுகளுக்கு மேலாக கலப்படம் இல்லாத நெல் விதைகளைப் பாதுகாத்து வருவதால் இவருக்கு நெல் ஜெயராமன் என்ற பெயர் விவசாயிகளால் சூட்டப்பட்டது. 

வருடா வருடம் பாரம்பர்ய நெல் திருவிழாவை நடத்தி, விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு இரண்டு கிலோ பாரம்பர்ய நெல்லை தந்து பாரம்பர்யம் பாழாய்ப் போகாமல் பாதுகாத்து வருபவர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் நெல் விதைகளைப் பாதுகாக்க வேண்டும், விவசாயிகளிடையே இயற்கை முறையில் விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும், எதிர்கால சந்ததியினர் விவசாயத்தை விடாமல் விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு கட்டப் போராட்டங்களையும், விழிப்பு உணர்ச்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு பாராட்டு விழா அரங்கேறியது... நாமும் அவரது பாரம்பர்யத்தைப் போற்றிப் பாராட்டுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க