எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் டென்ஷனான முதல்வர்!

 


    

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கடலூரில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.  விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், "பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா வழியில் வந்த தொண்டர்கள் இருக்கும் வரை இந்த இயக்கத்தை யாராலும் அசைக்கவோ, அழிக்கவோ முடியாது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், அம்மா என்ற இரு பள்ளியில் படித்த மாணவர்கள் நாங்கள். அதனால் யாருடைய மிரட்டல்களுக்கும் அஞ்சமாட்டோம். எத்தகைய இடையூறுகள் வந்தாலும் எதிர்கொள்வோம். சிலர் வானத்திலிருந்து குதித்துவந்ததுபோல பேசுகிறார்கள். நாங்கள் அப்படியில்லை. சாதாரண கிளைக் கழகத்திலிருந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளோம்.


  

நாங்கள், கொல்லைப்புறம் வழியாக வரவில்லை. ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, உழைத்துதான் வந்துள்ளோம். ஆனால், சிலர் கொல்லைப்புறம் வழியாக வந்து கட்சியையும் ஆட்சியையும் பிடித்துவிட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது" என்று கோபம் கொப்பளிக்கச் சீறினார்.

அ.தி.மு.க-வில் நிலவும் அணிகள் பிரச்னை குறித்து பேசும்போது, முதல்வர் பயங்கர டென்ஷனாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!