முருகனுக்காகப் போராடிய ’அந்த’ நான்கு பேர் - கவனிக்க மறந்த அரசுகள்

ஒரு தொழிலாளியின் உயிரைக் காக்கப் போராடிய நான்கு பேரைப் பாராட்டத் தவறிவிட்டோம்.

திருநெல்வேலி மாவட்டம்,  சமூக ரெங்கபுரத்தைச் சேர்ந்த முருகன் என்கிற தொழிலாளி, கேரள மாநிலம் கொல்லத்தில் கவட்டியம் என்கிற இடத்தில் தங்கி  வேலை செய்துவந்தார்.கடந்த 6-ம் தேதி  இரவு 11 மணியளவில் முருகனும் அவரது நண்பர் முத்துவும் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது சாத்தணூர் அருகே சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பைக் ஓட்டிய முத்துவுக்கு லேசான காயமும், பின்னால் இருந்த  முருகனுக்கு  தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. சாத்தணூர் போலீஸார் இருவரையும்  மீட்டு கொல்லம் கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அங்கு முத்துவை சிகிச்சைக்காக அனுமதித்தனர். முருகனுக்கு முதலுதவி செய்துவிட்டு அங்கிருந்து லைவ் சேவ் எமெர்ஜன்சி ஆம்புலன்ஸ் சர்வீஸ் மூலம் மெடிட்ரினா மருத்துவமனைங்கு கிம்ஸ் டாக்டர்ஸ் அனுப்பி வைத்தனர். வெண்டிலேட்டர் வசதியில்லை. நியுரோ சர்ஜன் இல்லை போன்ற காரணங்களால் ஆறு மருத்துவமனைகளுக்குச் சென்றும் முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதனால் முருகன் ஆம்புலன்ஸில் துடிதுடிக்க இறந்துபோனார்

ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராகுல்

ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராகுல், கேரள முதல்வர் பினராயி விஜயன் முருகனின் குடும்பத்திடம், மருத்துவமனைகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டு, ’இனி மேல் இதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடக்காது. இது ஒட்டுமொத்த கேரளாவுக்கும் அவமானம்’ என்று தெரிவித்து இருந்தார். கேரள சட்டசபையில் பினராயி விஜயன் முருகனின் இறப்பு சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் விஜயகுமார், இ.எம்.டி. ராஜேஷ்

கடைசி வரை முருகனை காப்பற்ற 7 மணி நேரம் போராடிய ஆம்புலன்ஸ்காரர்கள் கொடுத்த புகார் இல்லை என்றால் முருகனின் பரிதாபமான இறப்பும், கேரள மருத்துவமனைகளின் அலட்சியமும், லட்சணமும் நாடு முழுவதும் தெரியாமல் போய் இருக்கும். கேரள முதல்வர் பினராயி விஜயன் மன்னிப்பு கேட்டிருக்கமாட்டார். மனிதாபிமானம் உள்ளவர்கள்.

  டிராக் பி.ஆர்.ஓ. ரோனா ரிபிரியோ.

 

ஆம்புலன்ஸ் டிரைவர் விஜயகுமார், இ.எம்.டி. ராஜேஷ், ஆம்புலன்ஸ் உரிமையாளர் ராகுல், ஒவ்வொரு ஆஸ்பிட்டலாக டிராக் செய்த டிராக் பி.ஆர்.ஓ. ரோனா ரிபிரியோ.7 மணி நேரம்,140 கிலோமீட்டர், ஆறு மருத்துவமனை என அலைந்து திரிந்த  இவர்களைப் போல் கேரள மருத்துவமனைகளும் டாக்டர்களும் மனிதாபிமானம் கொண்டிருந்தால் ஒரு ஏழை தொழிலாளியின் உயிர் போய் இருக்காது.

ஆம்புலன்ஸ்காரர்களின் வேலை, கடமைக்கு ஒரு மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு சேர்ப்பது மட்டும் கிடையாது. அதைத்தாண்டி சேவை மனப்பான்மையும் இருக்க வேண்டும் என தங்கள் செயல்களின் மூலம் நிருப்பித்து உள்ளார்கள் இந்த கேரள சேட்டன்கள். கடைசி வரை முருகனை காப்பாற்ற போராடி இந்த நான்கு பேரை பாராட்ட கேரளாவும், தமிழகமும் தவறிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!