வெளியிடப்பட்ட நேரம்: 18:23 (17/08/2017)

கடைசி தொடர்பு:18:40 (17/08/2017)

`இனி அணிகள் இணையும்’ - ஹெச்.ராஜா ட்வீட்

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் உடனடியாக இணையும் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

ஹெச்.ராஜா


இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹெச்.ராஜா, மன்னார்குடி குடும்பத்தினரை வெளியேற்றுவது மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைத்த இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிவிட்டார். இதனால், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு உடனடியாக நடைபெறும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹெச்.ராஜா, அணிகள் இணைப்பு விவகாரத்துக்கும் பா.ஜ.க-வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

சென்னையில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வேதா இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.