உம்மிடி நகைக்கடை வாரிசை மணக்கிறார், விஷாலின் தங்கை!

நடிகர் விஷாலுக்கு விக்ரம் கிருஷ்ணா என்ற அண்ணனும் ஐஸ்வர்யா என்ற தங்கையும் இருக்கிறார்கள். அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது மீண்டும் விஷால் வீட்டில் கெட்டிமேள சத்தம் கேட்கவுள்ளது. விஷாலின் தங்கையான ஐஸ்வர்யா, சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்துவிட்டு தற்போது விஷாலின் தயாரிப்பு கம்பெனியை கவனித்துவருகிறார். 

விஷால்

ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்துவைக்க வீட்டில் மாப்பிள்ளை பார்த்துவந்தனர். இந்த நிலையில் பிரபல உம்மிடி நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த உம்மிடி கிருத்திஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் செய்வதாக கடந்த ஆண்டே இருவீட்டாரும் பேசி முடிவுசெய்தனர். 

அதன்படி ஐஸ்வர்யா-கிருத்தீஷ் திருமணம் வரும் 27-ம் தேதி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் ஹாலில் நடைபெற உள்ளது. தங்கை ஐஸ்வர்யாவின் திருமண அழைப்பிதழை கொடுக்கும் பணிகளில் நடிகர் விஷால் பரபரப்பாக உள்ளார்.

விஷால்

அழைப்பிதழ் கொடுக்கும் இடங்களில் எல்லாம், விஷால் எதிர்கொள்ளும் ஒரே கேள்வி, ‘உங்களுக்கு எப்போது திருமணம்?’ 

ஆமாம் பாஸ், உங்களுக்கு எப்ப கல்யாணம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!