அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகக் கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்! | Heavy rain for next two days in TN, predicts meteorological centre

வெளியிடப்பட்ட நேரம்: 06:18 (18/08/2017)

கடைசி தொடர்பு:07:58 (18/08/2017)

அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகக் கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்!

தென்மேற்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக, தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது, காற்றழுத்தத் தாழ்வுநிலையாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில், நேற்று மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டிக்கொண்டிருக்கிறது. நகரின் பல சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாள்களுக்கு சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.