Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கிணறுகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபடும் இளைஞர்கள்; பெருகும் விழிப்புஉணர்வு!

ரு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் கொட்டித் தீர்த்த மழை வாழ்க்கைக்கும் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுத் தந்தது. நீர் மேலாண்மையில் தமிழ்நாடு எவ்வளவு தூரம் பின்தங்கியுள்ளது என்பதையும் தெள்ளத் தெளிவாக காட்டி விட்டே ஓய்ந்தது அந்தப் பெருமழை. இரண்டே வருடங்களில் தமிழகம் மீண்டும் தண்ணீர் தேடி ஓடத் தொடங்கியுள்ளது. எங்கு நோக்கினாலும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பெருமழையின் போதும் பாடம் படிக்காத அ.தி.மு.க அரசு அணைகள், குளங்கள், நீர்நிலைகளைத் தூர்வார முழுவீச்சில் களமிறங்கியதாகத் தெரியவில்லை. . 

கிணறுகளை தூர் வாறும் இளைஞர்கள்

அரசுக்கு அக்கறையில்லை என்றாலும் இளைஞர்கள் அரசை நம்பியிருப்பதில்லை. தமிழ்நாடு முழுவதுமே இளைஞர்களிடத்தில் நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புஉணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில் இளைஞர்களே பணம் பிரித்து நீர் நிலைகளை, குளங்களை ஏரிகளைத் தூர்வாரி வருகின்றனர். பொதுவாக ஏரிகள், குளங்களின் அருகே கிணறுகள் வெட்டுவது அந்தக் கால வழக்கம். ஏரியிலோ குளத்திலோ நீர் வற்றினாலும் கிணற்றில் நீர் வற்றாமல் இருக்கும். இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரத்தில் இருப்பதால், கிணற்றுத் தண்ணீர் மக்களுக்குக் கைகொடுக்கும். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது கூட உடலுக்கு  உடற்பயிற்சியாக இருந்தது. 

மழைப் பொய்த்தால் கூட, தண்ணீர் ஊறும்  கிணறு அமைந்திருந்தால் அந்த வயல் விவசாயத்தில் செழிப்பதைக் கண் கூடாகப் பார்க்க முடியும். இளைஞர்கள் நீர் நிலைகளின் மகத்துவத்தை உணர்ந்திருப்பதுடன் கிணறுகளின் முக்கியத்துவத்தையும் அறிந்து அவற்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுவருவது நல்ல மாற்றம்தான்!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement