Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாங்கள் ஒரு நாள் மாப்பிள்ளைதான்' - குமுறும் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர்கள்

நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டாலே, கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்களின் மவுசு கூடிவிடும். தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கும்  நட்சத்திரப் பேச்சாளர்களை, கட்சிகளின் தலைமை  ஒவ்வொரு மாவட்டமாக  அனுப்பிவைக்கும். தற்போது, அ.தி.மு.க-வில்தான் அதிக நட்சத்திரப் பேச்சாளர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

இதுகுறித்து அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளரான நடிகரிடம் விசாரித்தபோது, "அ.தி.மு.க-வில் இருக்குற நட்சத்திரப் பேச்சாளர்களைவிட சினிமாவைச் சார்ந்த நட்சத்திரப் பேச்சாளர்களுக்குத்தாங்க அ.தி.மு.க-வுல ரொம்பக் கஷ்டம். அம்மாவோட சாதனைகளை அமைச்சரோ மாவட்டச் செயலாளரோ மேடையில பேசுனா, மக்கள் கேட்க மாட்டாங்க, எங்களைப் போன்ற சினிமாவைச் சேர்ந்தவங்க பேசுனா, வண்டியில போறவங்களும் நின்னு கேட்பாங்க. நாங்களும் வேட்பாளரை ஆதரிச்சுப் பேசிட்டுப் போவோம். அப்போ, தலைவா! அண்ணேன்னு சொல்லுவாங்க. அவங்களும் ஜெயிச்சி எம்.எல்.ஏ., அமைச்சர்னு ஆகிருவாங்க. அதுக்கப்புறம் எங்களை கண்டுக்கவே மாட்டாங்க. பிரசாரத்துக்குப் போகும்போது, நல்ல ஹோட்டல்லகூட ரூம் போட்டுத் தரமாட்டாங்க.பேசுன பணம் முழுசாக்கூட வந்து சேராது. அதுக்காகவே, மூணாவது நபர் மூலமாதான் பணத்தைக் கொடுத்துவிடுவாங்க. சில நேரம் பாதி பணத்தையும் போராடித்தான் வாங்க வேண்டியிருக்கு. எதுக்காக இவங்க எங்களை ஏமாத்துறாங்கன்னா, நாங்க வெளியில சொல்ல மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தல்ல ஒரு நட்சத்திரப் பேச்சாளருக்கு அம்மா 10 லட்சம் கொடுக்கச் சொன்னாங்க. ஆனா, எங்களுக்கு வந்தது 1 லட்சம். ஒரு சிலருக்கு
2 லட்சம். மீதி பணம் என்னாச்சுனே தெரியலை'' என்றார் .

இன்னொரு நட்சத்திர பேச்சாளர் பேசும்போது, "ரயில் சிநேகம் போலதாங்க அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர்களின் நிலைமை. கூட்டம் இருக்கும்போது மட்டும்தான் மரியாதை. ஒரு நாள் மாப்பிள்ளை போலதான். தமிழ்நாட்டை ஆள்றது அ.தி.மு.க.தான் .ஆனா, சினிமாத்துறை தி.மு.க. வசம்தான் இருக்கு. 80 சதவிகிதத்துக்கு மேல தி.மு.க சார்ந்த புரொடியூசர்கள் இருக்க, நாங்க அ.தி.மு.க கரை வேட்டியினு பட வாய்ப்பே தரமாட்டாங்க. சினிமாவுல இருக்குற அ.தி.மு.க.காரங்களும் எங்களுக்கு வாய்ப்புத் தரல. ஏன், ஜெயா டி.விகூட கண்டுகொள்றதில்லை. இதனால, எங்க வாழ்வாதாரமும் பொருளாதாரமும் ரொம்ப பாதிக்கப்படுது .குழந்தைகளைப் படிக்கவைக்கவே சிரமமா இருக்கு. கலைத்துறையினருக்கான வீடுகளைக்கூட எங்களுக்கு அலாட் பண்ணித் தரல. கட்சியில இருந்தா ஏதாவது உதவி கிடைக்குமேனு, வந்த பட வாய்ப்புகளும் நழுவிப் போயிருது. கலைத்துறையிலேயே எத்தனையோ கௌரவமான பதவிகள் இருக்கு. அதைக்கூட எங்களுக்குத் தரல. கட்சியில மரியாதைகூட இல்லை.

2014 நாடாளுமன்றத் தேர்தல்ல சூறாவளியா பிரசாரம் செய்த நட்சத்திரப் பேச்சாளரான நடிகை ஒருவர், சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்துவந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மழையில் சென்னை மூழ்கியபோது, அவரது வீடு, கார் எல்லாம் மூழ்கிருச்சு. அவர், பல அ.தி.மு.க முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்னு கட்சியில் உள்ள முக்கியப் பிரமுகர்களுக்கு போன்செய்து உதவி கேட்டார். கடைசி வரை யாரும் உதவி செய்யல. அதனால மனசு உடைஞ்ச அந்த நடிகை, சென்னையைக் காலி செஞ்சுட்டு  மும்பைக்கே போயிட்டாங்க. 2016 சட்டமன்றத் தேர்தல்லகூட அவங்க பிரசாரத்துக்கு வரல. இப்போ, உள்ளாட்சித் தேர்தல் வேற வருது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement