Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரன் பற்றிய கேள்விக்கு மெளனம் காத்த அமைச்சர்!

மதுரைக்கு இன்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜு, தொகுதி மக்களைச் சந்திக்க வந்தபோது, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ''கூட்டுறவுச் சங்கங்களில் அதிகமான அளவில் கடன் அளிக்கப்படும். அரசு இந்தாண்டு ஏழாயிரம் கோடி அறிவித்துள்ளது.  எந்த மாவட்டத்தில் குறைவாகக் கடன் வழங்கப்படுகின்றது என என்னிடம் தெரிவித்தால் உடனடியாக அந்த சங்கத்தின் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் கட்சி ஒன்றுபட வேண்டும் என நினைக்கிறார்கள்.  கட்சியில் அணிகள், பிணிகள் என்று இருபிரிவு இருக்கக் கூடாது. சகோதரர்களாக இருந்து அம்மா, புரட்சி தலைவர் லட்சியத்தை யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சியை இணைத்து சகோதரர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இதில் விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை. மதுரை மாவட்டத்திலும் கட்சியிலுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும். அடுத்த தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்துடன் தி.மு.க.வைச் சந்திக்க வேண்டும்'' என்றவர், தினகரன் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் கிளம்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement