Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்ச்சைக்குள்ளாகும் தாயமங்கலம் கோயில் ராஜகோபுரம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் கட்டப்படும் ராஜகோபுரம், பக்தர்கள் மத்தியில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் அமைந்துள்ளது, தாயமங்கலம். இந்தக் கிராமத்தில், பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  தென்மாவட்ட மக்கள் வழிபடும் சக்திவாய்ந்த அம்மனாகத் திகழ்கிறது. பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவுக்குக் கூடும் பக்தர்கள் மட்டும் குறைந்தது 10 லட்சத்தைத் தாண்டும். ஆனால், பக்தர்களுக்குத் தேவையான குடிதண்ணீர் இல்லை. பக்தர்கள் உடைமாற்ற இடமில்லை. மொட்டையடித்தால் குளிப்பதற்கும் இடமில்லை. இத்தனை பிரச்னைகள் இருக்கின்றன.

   

இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதற்காவும் ராஜகோபுரம் கட்டுவதற்காகவும்  2 கோடி ரூபாய்க்கு அனுமதி வழங்கியிருக்கிறது. கோயில் முன்பு, தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, கோயில் முன்பு மண்டபம் இருப்பதால், ராஜகோபுரம் கட்டியும் பயனில்லை. ராஜகோபுரத்தில் அமைந்துள்ள லட்சுமியை வழிபட்டுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். ஆனால், இவர்கள் கட்டும் ராஜகோபுரம், லட்சுமியை மறைத்துவிடும். ராஜகோபுரத்துக்கான அழகே இல்லாமல் போய் விடும் அளவுக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டுவருகிறது. ஆகையால், இந்து அறநிலையத்துறை கோயில் முன்பு இருக்கும் மண்டபத்தை இடித்துவிட்டு ராஜகோபுரம் கட்டினால், கோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்களும் மன நிறைவோடு கோபுர தரிசனத்தை வழிபட முடியும். அதே நேரத்தில், பக்தர்களின் கோரிக்கையை இந்து அறநிலையத்துறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement