Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’சின்னம்மா வெளியே வரவேண்டும்!’ - இறைவனிடம் உருகிய தினகரன் தொண்டர்கள்

 

மேலூர் சாமி

தமிழக அரசியல் காரசாரமாகச் செல்லும்நிலையில், அடிமட்டத் தொண்டர்கள் ஒரு பக்கம் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிவருகின்றனர். இந்நிலையில், டி.டி.வி.தினகரனின் மதுரை மாவட்ட ஆதரவாளர்கள், சசிகலா பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடிவருகின்றனர்.

அ.தி.மு.க அம்மா அணியின் கழக அமைப்புச் செயலாளரான மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.சாமி, கட்சிப் பணிகளை ஆர்வத்தோடு செய்கிறார் . கடந்த 14-ம் தேதி, மேலூரே அதிர்ந்துபோகும் அளவுக்கு தொண்டர்களைத் திரட்டினார் . டி.டி.வி.தினகரனுக்கு தொண்டர்களின் சப்போர்ட் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தநிலையில், மேலூரில் நடைபெற்ற கூட்டம் அதையெல்லாம் அடித்துச் சாப்பிட்டது . ஏற்கெனவே, டி.டி வி-யிடம் நெருக்கமாக இருந்த ஆர்.சாமி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பொதுக் கூட்டத்துக்குப் பிறகு, டி.டி.வி. மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் . இந்நிலையில், சசிகலா அவர்கள் 64-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேலூர் சிவன்கோயில், காமாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை செய்துள்ளார். மேலும், பக்தர்களுக்கு பொங்கல், இனிப்புகள் வழங்கினார்,  .

சின்னம்மா மீதுள்ள வழக்குகள் எல்லாம் விலகி, விடுதலை ஆக வேண்டும் என்று மனம் உருக வேண்டிக்கொண்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பகுதிச் செயலாளர் ஜெயபால் தலைமையில் சசிகலா வுக்காக சிறப்பு வழிபாடுகளும் நடந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement