Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக ஆதாரம் இருந்தால் கைதுசெய்யலாம் - உச்ச நீதிமன்றம்

'கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகப் போதிய ஆதாரம் இருந்தால், அவரைக் கைதுசெய்யலாம்' என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 

கார்த்தி சிதம்பரம்


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, லுக் அவுட் நோட்டீஸை சி.பி.ஐ, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், அந்த லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸுக்குத் தடை இல்லை என்று உத்தரவிட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய வழக்கு விசாரணையின்போது கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார். 

அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்கும் நீங்கள், சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளிக்கத் தயங்குவது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பல்வேறு வழக்குகளில் சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளித்துள்ளதாகவும் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டால், சி.பி.ஐ முன் ஆஜராகத் தயார் என்றும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, 'போதிய ஆதாரங்கள் இருந்தால், கார்த்தி சிதம்பரத்தைக் கைதுசெய்யவேண்டியதுதானே' என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆதாரங்கள் இருப்பினும், தற்போது விசாரணை மட்டுமே நடைபெற்றுவருவதாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில், வரும் 23-ம் தேதி கார்த்தி சிதம்பரம் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement