வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (18/08/2017)

கடைசி தொடர்பு:17:49 (18/08/2017)

கடலூரை கதிகலக்கிய ஆந்திர வாட்ஸ்அப் கும்பல்!

வாட்ஸ்அப் மூலம் விபசாரம் செய்யும் வெளிமாநிலக் கும்பலை போலீஸார் கைதுசெய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் அதிரடி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. அதனால், சந்தேகமடைந்த போலீஸார், அந்தக் காரை துரத்திப்பிடித்து விசாரணை செய்தனர்

.

 

அப்போது, அவர்கள் வாட்ஸ்அப் மூலம் விபசாரம் செய்யும் கும்பல் என்று தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலுக்குத் தலைவியான ஆந்திர மாநிலம் காளகஸ்தியைச் சேர்ந்த சரஸ்வதி, பாண்டிச்சேரியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் ராஜேந்திரகுமார் ஆகிய புரோக்கர்கள் மூலம் பெண்களை அழைத்து வந்து, வெளிமாநில மாணவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களுக்குப் பெண்களை சப்ளை செய்பவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த கார், ரூ.10,000 ரொக்கம், விலை உயர்ந்த மூன்று செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு, வீரியமூட்டும் மாத்திரைகள் மற்றும் காண்டம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர்.