Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர், இரண்டு அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு!

முதலமைச்சர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர் டிஃராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர் டிஃராபிக் ராமசாமி இன்று தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 420-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமைச்சர் காமராஜ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், இவர்கள் மூவரையும் அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் அல்லது இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஆளுநருக்குப் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மூவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement