Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் முன் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கண்களில் கறுப்புத்துணியைக் கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய அஞ்சலகங்களில் புறநிலை ஊழியர்களாக பணியாற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின்  சாதகமான பரிந்தரைகளை அமல்படுத்துதல், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கி இலாகா ஊழியராக ஆக்குதல், மத்திய மற்றும் சென்னை நிர்வாக தீர்ப்பாயங்கள் வழங்கிய தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்குதல், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயித்து மிரட்டும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கடந்த 16-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் தலைமை அஞ்சலகம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சங்கத்தின் ராமநாதபுரம் கோட்ட நிர்வாகிகள் சேகர், ஜான்பிரிட்டோ, ராமமூர்த்தி, இளையராஜா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கண்களை கறுப்புத் துணியினால் கட்டிக்கொண்டும் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பணியாற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இதில் பங்கேற்றனர்.

இதேபோல், திருவாடானை வட்டம் மங்கலக்குடியில் ராஜாமணி தலைமையில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மங்கலக்குடி, சிறுமலைக்கோட்டை, கவலை வென்றான், ஆண்டாவூரணி, பெருவாக்கோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement