Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மக்கள் தினகரனை ஓரங்கட்டிவிடுவார்கள்! அ.தி.மு.க எம்.எல்.ஏ அதிரடி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  இல்லத்தை நினைவுச் சின்னமாக மாற்றத் தடையாக இருந்தால் தமிழக மக்கள் தினகரனை ஓரம் கட்டிவிடுவார்கள் என்று கோவை கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் தெரிவித்துள்ளார்.

கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எட்டிமடை சண்முகம். "தமிழகத்தில் அடிமட்டத் தொண்டர்கள் முதல், அமைச்சர்கள், பொதுமக்கள் என அனைவரும் எதிர்பார்த்திருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷன் அமைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் இந்த விசாரணை  தீர்வாக அமையும். இதேபோல், அ.தி.மு.க தொண்டர்கள் கோவிலாக மதிக்கும் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லத்தை நினைவுச் சின்னமாக அறிவித்த முதல்வருக்கு நான் மனதார நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியடையச் செய்துள்ள இந்த அறிவிப்பு குறித்து விமர்சிக்கும் தினகரன் மற்றும் அவரை சார்ந்திருக்கும் சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று எதிர்மறை கருத்துகளை தினகரன் கூறி வந்தால் தற்போது கட்சியால் ஓரம் கட்டப்பட்டுள்ள அவர், தமிழக மக்களால் நிரந்தரமாக ஓரம் கட்டப்படுவார் எனவும், வேதா இல்லத்தை நினைவுச் சின்னமாக மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை எனக் கூற தினகரனுக்கு அதிகாரமில்லை'' என்றார்.

மேலும், ''தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக தினசரி ஏதாவது கூற வேண்டும் என்றே பல கருத்துகளை கூறி வருகிறார். அதனால் அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தற்போது வேதா இல்லம் தனக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் கூறி வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement