Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பூர் மாவட்டத்தில் போலி டாக்டர் கைது - வளைத்துப் பிடித்த சுகாதாரத்துறை!

பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை பார்த்து வந்த போலி டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்தவர் அப்துல்ரசாத் முகம்மது. இவர் பல்லடம் அருகே மந்திரிபாளையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவர் அவ்வப்போது சித்த மருத்துவ சிகிச்சைக்குப் பதிலாக ஆங்கில மருத்துவ சிகிச்சையும் பார்த்து வருவதாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சில நாள்களுக்கு முன் தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்துல் ரசாத்தின் கிளினிக்கில் இன்று திடீர் ஆய்வு நடத்தினர். அதில் ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்த அப்துல் ரசாத்தைப் பிடித்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதன் பிறகு, நீதிமன்ற உத்தரவுபடி அப்துல்ரசாத்தைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement