இணையும் அ.தி.மு.க-வில் 6 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு! | Six member committee formed to proceed AIADMK merger

வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (18/08/2017)

கடைசி தொடர்பு:16:47 (18/08/2017)

இணையும் அ.தி.மு.க-வில் 6 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு!

அ.தி.மு.க.  எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் அணியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் இணையும்பட்சத்தில், இரு தரப்பிலும் இருந்து தலா மூன்று பேர் அடங்கிய வழிகாட்டுக் குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதுடன், அவர் வாழ்ந்த இல்லம் அரசு நினைவிடமாக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணையும் வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளும் இணையும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூன்று பேருக்கு அமைச்சர் பதவி அளிப்பது எனவும், இரு தரப்பிலும் இருந்து தலா மூன்று பேர் இடம்பெறும், அதாவது ஆறு முக்கிய நிர்வாகிகளைக் கொண்ட வழிகாட்டுக் குழுவை அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழிகாட்டும் குழுவே கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று தெரிகிறது. இந்தக் குழுவில் இடம்பெறுவோர் யார் என்பதை முடிவு செய்யும் வேலையில் இருதரப்பினரும் ஈடுபட்டு, அவர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க