Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாலைகளில் குப்பை குவியல்..! அவலத்தில் நாகர்கோவில் நகராட்சி

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலில் தொடர்ச்சியாகச் சுகாதாரச் சீர்கேடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கடந்த உள்ளாட்சியில் பி.ஜே.பி. கைப்பற்றிய ஒரே நகராட்சி நாகர்கோவில்தான். இந்த நகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள
52 வார்டுகளில் 25 வார்டுகளில் துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றி வருகிறது. மற்ற இடங்களில் தனியார்கள் குப்பைகளை அகற்றுகிறார்கள். போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல், கழிவுகளை அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளன. இதற்கிடையே பொதுப்பணித்துறை பாசன கால்வாய்கள் பராமரிப்பில் அக்கறை செலுத்துவதில்லை. இதற்கான ஒதுக்கப்படும் நிதி முறையாகப் பராமரிப்பு செய்யப்படுவதில்லை. இதனால் நகர பகுதியில் ஓடக்கூடிய பாசன கால்வாய்கள்கூட கழிவுகளால் நிரம்பி துர்நாற்றத்தையும் தொற்று நோயையும் பரப்பி வருகிறது.

மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டம் என்பதையும் நடைமுறைப்படுத்துகிறது. ஆனால், நாகர்கோவில் நகராட்சியில் தூய்மை என்பது பல்வேறு இடங்களில் கேள்விக்குறியாகி உள்ளது. நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாதது, ரோட்டு ஓரங்களில் குப்பை, சாக்கடை ஓடையில் புதர் மண்டிக்கிடப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாகர்கோவில் நகரின் வழியே போகும் அரசின் உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் தினம் சென்று வருகிறார்கள். சாலைகளின் ஓரமாகக் குப்பைகள் சிறுசிறு குவியல்களாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டுக்குள் உருவாக்கப்படும் அத்தனை மாசுகளும் பாலித்தீன் பைகளில் கட்டப்பட்டு அந்தக் குப்பை மலைகளுக்கு வந்து சேருகின்றன.

அழுகிய உணவுப் பொருள்கள், இறைச்சி கழிவுகள், எலும்புத் துண்டுகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள், ஊசிகள், பிளாஸ்டிக் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் ,நோய் பரப்பும் கிருமிகள் நிறைந்த துணிகள், பஞ்சுகள், வீணான பொருள்கள், மலங்கள், பாத்திரங்கள் என்று அத்தனை விதமான குப்பைகளும் எளிதில் மக்கிப்போக விடாத பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டும், அப்படியே இந்தக் குப்பை மலைகளில் கொட்டப்பட்டும் சாக்கடைகளில் வீசப்பட்டும் நாகர்கோவில் நகரம் முழுவது துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றன. தினமும் நாகர்கோவில் பகுதிகளில் 60 டன் குப்பைகள் அள்ளப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் சொல்கிறார்கள். அந்தக் குப்பைகளை நகரின் மையப் பகுதியான வலம்புரி விளை குப்பைக் கிடங்கில் கொட்டுகிறார்கள். அங்கிருந்து தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இது தவிர, காற்றில் குப்பை கிடங்கில் இருந்து குப்பைகள் பறந்து வாகனத்தில் போகிறவர்கள் மீது விழுகின்றன. நகரில் இதனால் கண் எரிச்சலும் துர்நாற்றமும் வீசுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement