Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிர்ச்சித் தகவல்; முருகன் இறப்பும் கோரக்பூர் சம்பவமும் ஒன்றுதான்!

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் 15 வென்டிலேட்டர்கள் இருந்த நிலையில்தான் முருகன் உயிரிழந்ததாக அந்த மருத்துவமனையின் சூப்பிரண்ட் அறிக்கை அளித்துள்ளார்.

தமிழரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகன் கொல்லம் அருகே நடந்த விபத்தில் படுகாயமடைந்தார். கொல்லம், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் (சுவாசக்கருவி) இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் இருந்ததாக கூறப்பட்டது. முடிவில் முருகன் பரிதாபமாக உயிரிழந்தும் போனார். 

தற்போது, முருகன் இறப்பில் முக்கியத் திருப்பமாக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையின் சூப்பிரண்டு அளித்துள்ள அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையின் படி, ''முருகன் சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டபோது, 15 வென்டிலேட்டர்கள் மருத்துவமனையில் இருந்துள்ளன. அடுத்த நாள் மருத்துவமனையில் 111 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருந்துள்ளது.

அதற்காக, 15  வென்டிலேட்டர் கருவிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதுதவிர, 5 வென்டிலேட்டர் கருவிகள் அவசரத் தேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. 55 வென்டிலேட்டர்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்துள்ளன. 19 வென்டிலேட்டர்கள் முருகன் கொண்டு வரப்பட்டபோது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன''  எனக் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் 15 வென்டிலேட்டர் கருவிகள் இருந்த நிலையில்தான் முருகனுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் மறுத்துள்ளனர். அடுத்தநாள், மேற்கொள்ளவிருக்கும் அறுவைசிகிச்சைகளுக்காக வென்டிலேட்டர்களை பயன்படுத்தத் திட்டமிட்டு, முருகனுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முருகனின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று கேரள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் சுவாசக்கருவிகள் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்தன. கேரளாவில் சுவாசக்கருவிகள் இருந்தும் முருகன் உயிரிழந்துள்ளார். அரசு மருத்துவமனை அவலங்கள் என்றுதான் நீங்குமோ தெரியவில்லை!

photo courtesy: mathrubhumi

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement