Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓணம் கொண்டாட்டத்துக்குத் தயாராகும் கேரள அரண்மனை!

வேணாட்டு மன்னர்களும், திருவிதாங்கூர் மன்னர்களும் வசித்த, நிர்வகித்த பத்பநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரத்தில் அமைந்திருக்கிறது. அரண்மனை, கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையைச் சுற்றி 4 கி.மீ. அளவுக்கு கிரானைட் கற்களால் கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான வெள்ளி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இந்த அரண்மனை கி.பி 1601-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவிவர்ம குலசேகரப் பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க்கொட்டாரம் மட்டும் 1550-களில் இருந்ததாகத் தெரிகிறது. பின்னர், கி.பி 1706-1758 வரை ஆண்ட அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இந்த அரண்மனையை விரிவுபடுத்தினார். அதன்பிறகு, மன்னர் மார்த்தாண்டவர்மா தங்கள் பரம்பரையினரை பத்பநாபபுரத்தில் கோவில்கொண்டுள்ள விஷ்ணுவின் தாசர்கள் என பிரகடனம் செய்தார். 1795-ம் ஆண்டு வரை பத்மநாபபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்தது.

1795-ம் ஆண்டுதான் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனையில் உள்ள முக்கியமான கட்டடங்களாகப்
பூ முகப்பு வாசல், மந்திர சாலை, தாய்க் கொட்டாரம், நாடக சாலை, நான்கடுக்கு மாளிகை (உப்பரிகை), தெற்கு கொட்டாரம் ஆகியவை  இருக்கின்றன. பத்மநாபபுரம் அரண்மனையை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதி என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். சுமார் 14 மாளிகைகளைக்கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.

காண்போரைக் கொள்ளைகொள்ளும் விதத்திலே எளிமையான கேரளக் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சிறிய மாளிகையாக இருந்து, காலம்தோறும் ஆட்சி புரிந்த மன்னர்களால் விரிவாக்கப்பட்டுள்ளது. இன்று காட்சியளிக்கும் நிலையை 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அரண்மனை அடைந்ததாக வரலாறு கூறுகிறது. நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பு எங்கிலும் பரவலாகக் காண முடியும். அரண்மனைக்கு உரித்தான செல்வச்செழிப்பை அரண்மனையின் உள்ளக, வெளியக வடிவமைப்பு காட்டுகிறது. அரண்மனை ஜன்னல்கள் வழியாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால், உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம்.


சுமார் 400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும்கூட மின் விளக்குகளைக் காணமுடியாது. இயற்கை ஒளி முதலாகிய சூரியனின் ஒளியே போதிய அளவான வெளிச்சத்தை வழங்குகிறது.

எனவே, காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய் முதல் ஞாயிறு வரையான நாள்களில் இந்த அரண்மனையைப் பொதுமக்கள் பார்வையிட முடியும். குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. தற்போது ஓணம் கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement