Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

                     

இன்று நாடு முழுவதும் நல்லிணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து அரசு அதிகாரிகளும் இன்று நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்திலும் எல்லா மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் தொடங்கி கடைநிலை ஊழியரான பியூன் வரை நல்லிணக்கநாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். கரூர் மாவட்டத்திலும் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஏற்றுக்கொண்டனர்.

கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இன்று (18.8.2017) நல்லிணக்கநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், "நான் சாதி, மத, இன வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு வேற்றுமை எதுவும் இன்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வமான ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமாற உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

மேலும், எங்களிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், பிரச்னைகளுக்கான தீர்வை வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதன்மூலம் உளமாற உறுதி அளிக்கிறேன். இந்த உறுதிமொழியில் இருந்து எதற்கும் எக்காலமும் வழி பிறழ மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்" என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவப்பிரியா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் உளமாற எடுத்துக்கொண்டனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement