Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ.பி.எப் வீட்டுவசதி திட்டம் : இந்தியாவிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் துவக்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்) நிறுவனத்தின் வீட்டுவசதி திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்கவிழா இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.   

திட்டத்தை துவக்கி வைக்கும் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா

இத் திட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ‘'இந்தியாவில் 4.75 கோடி பேர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த அலுவலகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டத்தின் படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்ட சங்கத்தை தோற்றுவித்து அதன் உறுப்பினர்களுக்கு வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனிவீடுகள் கட்டுவதற்கு கடனுதவிகள் பெறலாம். ரூ.2.25 லட்சம் முதல் ரூ.2.65 லட்சம் வரை வட்டி மானியமாகப் பெற முடியும். இதுதவிர, தொழிலாளர்கள் தங்களது பி.எப் கணக்கிலிருந்து 90 சதவிகித தொகையை வீடுகட்ட எடுத்துக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தூத்துக்குடியிலுள்ள செயின்ட் ஜான் என்ற தனியார் நிறுவனம் அவர்களிடமுள்ள 200 தொழிலாளர்களுக்கு வீடுகட்ட கடன் வசதி கோரியது. இதில் முதல் கட்டமாக 125 தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்களின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இந்தியாவிலேயே இந்தத் திட்டத்தை தமிழகத்தில் தொழிற்சாலைகள் மிகுந்த நகரமாம் தூத்துக்குடியில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். தொடர்ந்து இத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். பி.எப் நிறுவனம் தொழிலாளர்களின் ஓய்வுகால ஓய்வூதியம் வரை தொழிலாளர்களிடம் இணைந்திருப்பது மட்டுமல்லாமல் தொழிலாளர்களுக்கு வசிக்க வீடு வழங்கி அவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்திருக்கும்படி வாழ்வில் இணைந்திருக்கும்’’ என்றார். 
 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடிக்கு வர இருக்கும் சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை சார்ந்த அறிவிப்புகளைப் பற்றி மேடையில் கூறிய பொன்னார், விழா முடிந்ததும் செய்தியாளர்களிடம், ‘’அ.தி.மு.க அணிகள் இணைந்தால் அது அவர்களுக்குத்தான் நல்லது. ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை ஒரு காலம் கடந்த அறிவிப்பு. ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு அ.தி.மு.க-வினர் மரியாதை அளிக்க வேண்டும். ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை அரசு  நினைவிடமாக  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

விழாவில் மத்திய அமைச்சர்களுடன் சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ  கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement