Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயிரைப் பறித்த திருட்டுப் பட்டம்! - சோகத்தில் மூழ்கிய சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் காமலாபுரத்தை அடுத்த சந்தை தடத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு கெளதம் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். கெளதம் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சேலம் புதிய பேருந்து நிலையம் அங்கம்மாள் காலனி பகுதியில் உள்ள  பாலு கவரிங் நகை மெருகேற்றும் பட்டறையில் வேலை செய்துவந்தார்.

சேலம்
 

நேற்று மதியம் பட்டறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போது கெளதம் இறந்துவிட்டார். இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்களும், உறவினர்களும் கெளதம் உடலை உடற்கூறு செய்ய அனுமதிக்காமல் சேலம் அரசு மருத்துவமனையில்  போராடி வருகிறார்கள். இதனால் சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கெளதமின் மாமா குமாரிடம் கேட்டதற்கு, ''கடந்த 3 வருடமாக சேலம் புது பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் பாலு, இராமகிருஷ்ணன், தனபால் ஆகியோருக்குச் சொந்தமான கவரிங் நகை மெருகேற்றும் பட்டறையில் வேலை செய்துவந்தான். அவனோடு மேலும் இரண்டு இளைஞர்கள் வேலை பார்த்துவந்தார்கள். இந்நிலையில் கடந்த வாரம் உண்டியலில் வைத்த பணம் காணவில்லை என்று பட்டறையின் உரிமையாளர்கள் நேற்று காலையில் இருந்து தங்களிடம் வேலை பார்க்கும் கெளதம் உட்பட 3 பேர்களையும் தனித்தனியே விசாரித்து இருக்கிறார்கள்.

அப்போது பணத்தை கெளதம்தான் எடுத்ததாகச் சொல்லி மிரட்டியதாகவும், அதனால் மருந்து குடித்து இறந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். கெளதம் நிச்சயம் பணம் எடுத்திருக்கமாட்டான். மருந்து குடித்து சாவதற்கு அவன் கோழை அல்ல. அந்த பட்டறையின் உரிமையாளர்கள்தான் கெளதமை அடித்துக்கொன்றிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

மருந்து குடித்திருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குத்தானே கொண்டுபோயிருப்பார்கள். போலீஸ் கேஸ் பெற்றோர்கள்தானே கொடுத்திருக்க வேண்டும். ஏன் உரிமையாளர் முந்திக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். இப்படி எங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பதால் உடனடியாக சந்தேகத்துக்குரிய பட்டறை உரிமையாளர்களை கைதுசெய்ய வேண்டும். அதுவரை உடற்கூறு ஆய்வுக்கும்,  உடலை வாங்கவும் மாட்டோம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement