தனியார் தொலைக்காட்சிக்கு ஜூலி வைத்த 2 கண்டிஷன்!

சென்னையில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு இன்டர்வியூக்குச் சென்ற பிக் பாஸ் ஜூலி இரண்டு கண்டிஷன்கள் வைத்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

விஜய் டிவி-யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த ஜூன் 25-ம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர், நடிகைகள் 14 பேர் மற்றும் ஜூலி ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
41 நாள்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜூலி, எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்ததோடு, சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியைக் காணவந்த நடிகர் பரணியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரியதாக வீடியோ வெளியானது.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நேர்காணலுக்காக ஜூலி சென்றுள்ளார். அப்போது, நிறுவனத்திடம் அவர் இரண்டு கண்டிஷன்களை வைத்துள்ளார். ஒன்று, 'நான் செய்தி வாசிக்க மாட்டேன்'; இரண்டாவது, 'விஜய் டி.வி-யிலிருந்து எனக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம். அப்படி வந்தால் நான் சென்றுவிடுவேன்' எனக் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளைத் தொலைக்காட்சி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் பணியில் சேருவார் என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!