'ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரம் தொடர்பான விசாரணை முடிய ஆறு மாதங்கள் ஆகும்' | It will take six months for jallikattu enquiry - comment by judge

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/08/2017)

கடைசி தொடர்பு:21:30 (18/08/2017)

'ஜல்லிக்கட்டுப் போராட்டக் கலவரம் தொடர்பான விசாரணை முடிய ஆறு மாதங்கள் ஆகும்'

 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நடந்த வன்முறை தொடர்பான விசாரணை முடிய ஆறு மாதங்கள் ஆகும் என நீதிபதி ராஜேஷ்வரன் கோவையில் தெரிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது நடந்த வன்முறையை விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரனின் ஒரு நபர் கமிஷனை அரசு நியமித்தது. இதில், பாதிக்கப்பட்ட மக்களும் காவல்துறை தரப்பும் அளித்த புகார் மனு மீதான விசாரணையை நீதிபதி ராஜேஷ்வரன் நடத்திவருகிறார். கடந்த 16-ம் தேதி முதல் கோவையில் விசாரணை நடத்தி வந்த ராஜேஷ்வரன் இன்றோடு விசாரணையை முடித்தார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த நீதிபதி ராஜேஷ்வரன். "கோவையில் 51 பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் 20 பேருக்கு சம்மன் அனுப்பி ஒவ்வொருவரிடமும்  தனித் தனியாக விசாரணை நடத்தியிருக்கிறோம். 16,17,18 ஆகிய மூன்று நாள்கள் கோவையில் விசாரணை நடத்தியுள்ளேன். சம்மன் அனுப்பப்பட்ட 20 பேரில் 15 பேர் விசாரணைக்கு வந்தார்கள். ஒரு நபர் சென்னை வந்து சாட்சியம் அளிப்பதாக சொல்லியிருக்கிறார். 4 பேர் விசாரணைக்கு வரவில்லை. இன்னும் கோவையில் 31 பேர் பாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு வரும் மாதங்களில் நாள்கள் ஒதுக்கி விசாரிக்க வேண்டும். போலீஸுக்கு ஆதரவாக சிலரும் போலீஸுக்கு எதிராக சிலரும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்

இந்த விசாரணை முடிய கிட்டதட்ட 6 மாதங்களுக்கு மேல் ஆகும் என்பது என் கணிப்பு.  ஒரு நாளைக்கு 5 பேரைத்தான் விசாரிக்க முடிகிறது. ஒரு நபருக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. ஆட்டோவை போலீஸ் தீயிட்டு கொளுத்துவது போன்ற வீடியோ காட்சிகள் உள்ளன. மக்களும் ஊடகங்களும் அதைச் சொல்கிறார்கள். போலீஸிடம் விசாரணை நடத்தும்போதுதான் உண்மை தெரியவரும். அப்படி அந்த குற்றச்சாட்டு நிரூபணமானால் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லுவோம் என்றவர்.

தமிழ்நாடு முழுக்க பிரமாண வாக்குமூலம் தாக்கல்செய்ய ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்திருந்தோம். அந்த ஒரு மாதத்தில் 1949 பேர் மனு கொடுத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து  விசாரணை, குறுக்கு விசாரணை, மறு விசாரணை என மூன்று கட்ட விசாரணை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுக்க 436 போலீஸார்  வாக்குமூலம் அளிக்க மனு கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க