Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொங்கு மண்டலத்தை அழிக்கப் போகிறது கேரளா! - என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

கேரளா அரசு பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறது

கேரள அரசு தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், எதிர்ப்புகளை மீறி பவானி ஆற்றின் குறுக்கே மேலும் நான்கு இடங்களில் தடுப்பணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் கொங்கு மண்டல மக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆறு, அமைதிப் பள்ளத்தாக்கு வழியே, கேரளாவுக்குள் பாய்ந்து மீண்டும் அத்திக்கடவு வழியாக தமிழகம் திரும்புகிறது. கேரளாவுக்குள் பவானி பாயும் இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்துக்கான தண்ணீரைத் தடுக்கும் நடவடிக்கையில் பல ஆண்டுகளாக முயன்று வந்த கேரள அரசு, தான் நினைத்ததை சாதித்துக்கொண்டிருக்கிறது. 

பவானி ஆற்றின் குறுக்கே மஞ்சகண்டி, தேக்குவட்டை ஆகிய இரண்டு இடங்களில் தடுப்பு அணைகளைக் கட்டி முடித்துள்ளது கேரள அரசு. ஒவ்வொரு தடுப்பணையும் தலா 5 அடி உயரமும் 250 அடி அகலமும் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது. இதில் தலா 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணைகளிலிருந்தும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட  மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. இந்நிலையில், மேலும் அந்தப்பகுதியில் பாடவயல் உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் பணியில் தீவிரமாக உள்ளது கேரள அரசு.

கேரள அரசு அந்த நான்கு இடங்களிலும் அணையைக் கட்டிவிட்டால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து தடைபடும். மேலும், பவானி ஆறு வறண்டு போகும் அபாயமும் உள்ளது. பவானி ஆற்றை நம்பியுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தத்தளிப்பார்கள். தமிழக அரசு அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்காக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டுவதில் கவனம் செலுத்துகிறது. இப்படியே கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டிக்கொண்டே போனால், அத்திக்கடவு- அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த நமக்குத் தண்ணீர் இருக்காது.!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement