Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப்போதும் வெறிச்சோடிக் கிடக்கும் குமரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகம்!

குமரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளிலும் அ.தி.மு.க தோல்வியடைந்தது. அதனால் தளவாய் சுந்தரத்தை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ராஜ்யசபா எம்.பி-யாக அறிவிக்கப்பட்ட விஜயகுமாரை கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதா அறிவித்தார். அதனால் தளவாய்சுந்தரம், பச்சைமால், நாஞ்சில் முருகேசன் என குமரி அ.தி.மு.க-வில் கோலோச்சியவர்களும் அதிருப்தியில் இருந்தனர். விஜயகுமாரைச் சுற்றி, அவரது உறவினர்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் புது கோஷ்டியை உருவாக்கினார்கள். அடுத்து சில வாரங்களில் ஒரு சிலரைத் தவிர ஒட்டுமொத்தமாக கிளை முதல் மாவட்டம் வரை அனைத்து நிர்வாகிகளும் மாற்றப்பட்டனர். குமரி மாவட்டத்தில் ஆக்டிவாக இருந்த பல அ.தி.மு.க-வினருக்குப் பதவி பறிக்கப்பட்டதோடு, ஓரங்கட்டப் பட்டதால் அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும், ஓ.பி.எஸ்.ஸின் பிரிவுக்குப் பின்னரும் குமரியில் அ.தி.மு.க ஐந்து பிரிவுகளாகச் சிதறிப் போனது. முன்னாள் அமைச்சர்கள், பச்சைமாலும் தளவாய் சுந்தரமும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும் போது பரபரப்பாக இயங்கிக்  கொண்டிருந்த குமரி மாவட்டம் அ.தி.மு.க இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டது. தொண்டர்களும் சோர்வடைந்து விட்டனர். கழக அமைப்புச் செயலாளராகவும் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகவும் இருக்கும் தளவாய்சுந்தரம் சென்னை, டெல்லி அரசியலைக் கவனிப்பதால் அவரால், குமரி மாவட்டத்தைக் கவனிக்க முடியவில்லை. தற்போது முன்னாள் அமைச்சரான பச்சைமாலுக்கு டி.டி.வி.தினகரனால் கழக அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் உதவியாளராக இருந்த காரவிளை செல்வனுக்கு எம்.ஜி.ஆர்.இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. குமரியின் நீண்டகால அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த பச்சைமால் இப்போது பொறுமையாக இருப்பதால், டி.டி.வி.தினகரனின் அணியைச் சேர்ந்த காரவிளை செல்வன் மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிரூப்பிக்க முயற்சி செய்து வருகிறார். பெரும்பாலான அ.தி.மு.க-வினர் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் எனத் தெரியாததாலும் சரியான மாவட்டத் தலைமை இல்லாததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குமரி மாவட்ட அ.தி.மு.க அழிந்துகொண்டிருக்கிறது. 

இப்போது குமரிமாவட்டத் தலைமை அ.தி.மு.க. அலுவலகம் ஒரு சிலரைத் தவிர எப்போதும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. தொண்டர்கள், நிர்வாகிகள் என யாரும் கட்சி அலுவலகத்துக்கு வருவது இல்லை. 'மாவட்டச் செயலாளர் விஜயகுமார் கட்சிக்காரர்களை மதிப்பதே இல்லை, விஜயகுமார் வந்தபின் கட்சி அழியத் தொடங்கி விட்டது' என்று அ.தி.மு.க-வினர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அலுவலக நேரம் போல் காலை பத்து மணிக்குத் திறக்கப்படும் மாவட்டத் தலைமை அலுவலகம் மாலை ஆறு மணிக்கு அடைக்கப்படும். தொண்டர்கள் வந்தால் சாலையில் நின்று அலுவலகத்தைப் பார்த்து விட்டுச் செல்லலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement