Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் உயரும் நீர்மட்டம்

ஏரிகள், lakes

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் தண்ணீர் லாரிகளுக்குப் பின்னால் மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, சென்னை மக்கள், நள்ளிரவில் வரும் லாரிகளுக்காக தவம் கிடக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் 3 நாள்களுக்கு ஒருமுறை என லாரிகள் வந்ததால், தண்ணீர் பஞ்சம் உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், வட தமிழகத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிகளவில் மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னைக்குக் குடிநீர் வழங்கி வரும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் 47 மில்லியன் கன அடி நீர் அதிகரித்துள்ளது. வறண்டு காய்ந்து கிடந்த செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் பரவலான நீர்ப்பரப்புடன் காணப்படுகிறது. சென்னை மாநகருக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் கடந்த வாரம் 91 மில்லியன் கன அடியாக இருந்த நீரின் அளவு 47 மில்லியன் கன அடி அதிகரித்து 138 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனால், விரைவில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement