Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.எல்.ஏ-வின் வேண்டுகோளை நிறைவேற்றிய ஆட்சியர்!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மிகவும் பழைமையானது. கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு வயது 100 . இந்த அலுவலகம் அன்சுல் மிஸ்ரா, சகாயம் என்று பவர்புல் கலெக்டர்களைக் கண்டுள்ளது . இந்தக் கட்டடத்தின் தரைதளத்திலிருந்து முதல் தளத்துக்கு வருவதற்கு மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் சிரமப்பட்டுவந்தனர் .

மாவட்ட ஆட்சியர்

இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ போஸ், தனக்குக் கால்வலி இருப்பதாகவும் இந்தப் படிக்கட்டுகளில் ஏறமுடியவில்லை எனவும் லிப்ட் வசதி செய்துகொடுங்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசு விழாவில் வெளிப்படையாக மைக்கில் இதைப் பற்றி எம்.எல்.ஏ போஸ், கலெக்டர் முன்னிலையிலேயே பேசினார்.

இந்நிலையில் இதைச் சிந்தித்த மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், உடல் நலம் குறைந்தவர்கள் இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு லிப்ட் வசதி செய்துகொடுக்க தன் விருப்ப நிதியிலிருந்து சுமார் 27 லட்சம் ரூபாய் வழங்கி பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளர். இந்தப் பணி தற்போது நடைபெற்றுவருகிறது. விரைவில் இந்த லிப்ட் மக்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement