Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைப்பது சரியா? 

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நினைவிடமாக்கப்பட வேண்டுமென்றால் முதலில் அந்த வீடு அரசுடமையாக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். பாட்டியின் சொத்து என்கிற வகையில் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இவர்கள் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் இல்லையென்பதால், வேதா இல்லத்தை அரசுடமையாக்குவதில் பெரிய அளவில் சட்டச் சிக்கல் இருக்காது எனக் கூறப்படுகிறது. 

வேதா இல்லம் நினைவில்லம்

தற்போதையை நிலையில் வேதா இல்லத்தின் மதிப்பு சுமார் ரூ.75 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது. பாட்டியின் சொத்து பேரன்களுக்கு என்கிற வகையில் இந்தத் தொகையை அரசு தீபா, தீபக் ஆகியோருக்கு வழங்க முன்வரலாம். ஒருவேளை அவர்கள் கூடுதல் தொகை கேட்டால், உண்மையான மதிப்பைவிட இரண்டு மடங்குகூட அதிகமாக வழங்க வாய்ப்பிருக்கிறது. இரண்டு மடங்கு கூடுதல் என்றால்  ரூ.200 கோடி வருகிறது. மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து நினைவிடம் அமைப்பது அவசியமா என்கிற கேள்வி இங்கே எழுகிறது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. தீர்ப்புக்கு முன்னதாகவே அவர் இறந்து போனதால், தண்டனையிலிருந்து நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்துவதற்கே எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு நினைவிடம் அமைப்பது சரியா என்கிற கேள்வியும் எழுகிறது. 

வேதா இல்லத்தை அரசுடமையாக்க வழங்கப்படும் தொகை குறித்து முழுமையாக மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து மிகப் பெரிய தொகை வழங்கப்பட்டால், அதை எதிர்த்து சிலர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டவும் வாய்ப்பிருக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement