Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விபத்தில் சிக்கி 12 மணி நேரமா சாலையில் கிடந்தவரிடம் பணம் செல்போன் பறிப்பு

டெல்லியில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரிடம் இருந்து 12 ரூபாயை ஒருவர் திருடிச் சென்றுள்ளார். 

விபத்தில் சிக்கியவரிடம் ரூ.12 திருட்டு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் டிரைவராகப் பணிபுரியும் நரேந்திரக்குமார் (வயது 35) சொந்த வேலை காரணமாக செவ்வாய்க் கிழமை டெல்லி வந்துள்ளார். காஷ்மீர்கேட் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, கார் மோதியதில் சாலையோரத்தில் அவர் தூக்கி வீசப்பட்டார். நரேந்திரக்குமாருக்கு முதுகுத்தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், நகர முடியாமல் சாலையோரத்தில்
12 மணி நேரமாகக் கிடந்துள்ளார்.

சாலையில் சென்ற ஏராளமானோர் அவரைக் கடந்துதான் சென்றனர். என்ன ஏதுவென்று கேட்கவில்லை. ஆம்புலன்சுக்குக்கூட போன் செய்யவில்லை. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நடந்த விபத்து இது. புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் போலீஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் நரேந்திரக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் கிடந்தபோது, அவரிடம் இருந்த செல்போன், பேக், பாக்கெட்டில் வைத்திருந்த 12 ரூபாயும் திருடு போயிருக்கிறது. 

சம்பவம் குறித்து நரேந்திரக்குமார் கூறுகையில், ''முதுகுத்தண்டுவடத்தில் அடிபட்டதால் என்னால் நகரக்கூட முடியவில்லை. ரத்த வெள்ளத்தில் கிடந்த என்னைப் பார்த்து மது அருந்தியிருப்பதாக நினைத்துக்கொண்டு போய்விட்டனர். நான் வைத்திருந்த பையில் ரூ.15 ஆயிரம் இருந்தது. அதையும் திருடியுள்ளனர்'' எனக் கூறியுள்ளார். 

நரேந்திரக்குமாருக்கு கழுத்து, முதுகுத்தண்டுவடம், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement