’விதை நெல்லையே விற்கப்பார்க்கிறார்கள்’ - கொதிக்கும் நாஞ்சில் சம்பத்

''ஆட்சி அதிகாரம் இருக்கும் அகம்பாவத்தில் விதை நெல்லையே விற்கத் துடிக்கிறார்கள்'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியை தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க-வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகளும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட சில விவகாரங்களில் ஒத்தகருத்து ஏற்படாததால் அணிகள் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் கூறுகையில், ‘எல்லா அறைகூவல்களையும் எதிர்கொள்ள டி.டி.வி.தினகரன் தயாராக இருக்கிறார். அ.தி.மு.க-வில் எந்த மாற்றத்தையும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் உருவாக்கிட முடியாது. எந்த நிபந்தனையும் எங்களைக் கட்டுப்படுத்தாது. அணிகள் இணைப்பு என்ற கேலிக்கூத்து நீண்ட நாள்களுக்கு நிலைக்காது. காவிரி டெல்டா விவசாயிகளை இந்த அரசு வஞ்சிக்கிறது. பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா ஒன்றும் அவதார புருஷர் இல்லை. தமிழ்நாடு ஒன்றும் குஜராத் இல்லை’ என்று கொந்தளித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!