தன்னார்வலராக மாறிய ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷ்

யக்குநர் பாலா இயக்கிவரும் 'நாச்சியார்' படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருப்பதோடு தன்னை தன்னார்வத் தொண்டிலும் ஈடுபடுத்தி வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சனிக்கிழமைதோறும் ஒளிபரப்பாகிவரும் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக, விருதுநகர் மாவட்டம் தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவர் ஒருவரின் உதவியுடன் ஸ்மார்ட் போர்டும், அதைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பணியின்போதே அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காகக் கழிப்பறை கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ்

'Our village Our responsibility' என்ற கோஷத்துடன் நடைபெற்ற இந்தப் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னார்வலர்களுடன் தன்னையும் அப்பணியில் ஆர்வமுடன்  ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த பணியில் இணைந்து செயல்படுவதால், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். இதுபோல பல பிரபலங்கள் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபடலாமே எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் அந்தக் கிராம மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!